திருக்குறள்

Sunday, July 1, 2012

ரமணகிரி சுவாமிகள்

என்னுள் நான் இருக்கும் போது அவனில்லை...
என்னுள் அவன் இருக்கும் போது நானில்லை...

Saturday, March 3, 2012

மனிதன் எத்தனை வேளை உணவு கொள்வது


ஒரு மனிதன் எத்தனை வேளை உணவு கொள்வது என்பதிலும் உள்ள நியாயத்தை காண்போம்.
  
              ஒரு போது யோகியே

              இரு போது போகியே

              திரி போது ரோகியே

              சதுர்போது ப்போகியே

யோக நிலை கைக்கொள்ளும் துறவியானவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கொள்ள வேண்டும்.

உறவறம் காணும் இல்லறத்தார் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கொள்ள வேண்டும்.

யாராக இருப்பினும் மூன்று வேளை உட்கொண்டால் வியாதியஸ்தனாகி விடுவான்.

யாராக இருப்பினும் நன்கு வேளை உட்கொண்டால் மரணமடையக்கூடும் என்பதே பெரியோர் வாக்கு.

பாம்பாட்டிச் சித்தர்


"பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமிவலம் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவே
அயைடலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே!"

இறைவனுக்கு பூசை செய்கிறேன் பேர்வழி என சதா சர்வகாலமும் ஏதேனும் சடங்குகளை செய்வதாலும், அவரைப் பார்த்து புண்ணியம் தேட போகிறேன் என ஊர் ஊராய் கோவில் கோவிலாய் சுற்றுவதால் என்ன பலன் கிடைத்து விடும் என ஆன்மீகத்தின் அடிப்படையை இந்தப் பாடலில் கேள்விக்குள்ளாக்குகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இறை நிலை என்பது இவர்கள் எண்ணுவதைப் போல ஒரு மனித உருவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அருள் பாலிக்கிற அம்சமில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவ நிலை. தோற்றமில்லாத தோற்ற நிலை, எங்கும் நிறைந்திருக்கும் அத்தகைய நிலையினை நமக்குள்ளேயும் உணரமுடியும்.

இப்படியான இறை நிலையை பூசை செய்வதாலும், புண்ணியம் தேடி சுற்றுவதாலும், சமய நூல்களை படிப்பதாலும் அடைய முடியாது.தேவையற்ற சஞ்சலங்களுக்கு பலியாகாமல் சுயநலம் கடந்த பொது நலத்தோடு வாழ்ந்தால் எங்கும் நிறைந்திருக்கும் இறைநிலையினை உணர்ந்து அனுபவிக்க முடியும்.அந்த நிலைக்கு தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியுமென்கிறார்.

Monday, February 27, 2012

வாழ்வோம் வாழவைப்போம்

சித்தர்தம்             சீர்கருத்தை     சிந்தையில்            கொண்டே
சீரோடும்             சிறப்போடும்   சிங்காரச்                 சிரிப்போடும்
மண்ணுலகில்  மனிதநேயம்    மனிதகுலம்           மாண்புறவே
மகிழ்ச்சியாய்   வாழ்வோம்       வாழவைப்போம் வாழும் வரை!

Saturday, February 25, 2012

ரமண பகவான்


"நான், நான்" என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக்  கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ். ஒரு மந்திரத்தை செபம்  பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால்  மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ்.